மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று காலை 7 மணி அளவில் திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி காரில் ஏறி விருதுநகருக்கு சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காலை 10 மணிக்கு சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதாக சிறைத்துறை அறிவித்திருந்த நிலையில், கூட்டத்தை தவிர்க்கும் வகையில் காலை 7 மணிக்கே விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து புறப்பட்ட அவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் உள்ள அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, அங்கிருந்து சரியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.