முக்கியச் செய்திகள் தமிழகம்

டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்து: இருவர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த குமார் என்பவர் தனது மகள் தன்யஸ்ரீ மற்றும் சகோதரர் வெங்கடவரதன் ஆகியோருடன் சொந்த ஊரான திருச்சி மாவட்டம் குளத்தூரில் பொங்கல் கொண்டாடுவதற்காக வாடகை காரில் சென்றுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த குமார், வெங்கடவரதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தின்போது கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த காரை தண்ணீரை பீய்ச்சி அணைத்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த தன்யஸ்ரீ மற்றும் கார் ஓட்டுநர் விஸ்வநாதன் ஆகியோரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசி நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement:
SHARE

Related posts

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனிஷ்வர் நாத் பண்டாரி வரும் திங்கட்கிழமை பதவியேற்பு

Halley Karthik

5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

Halley Karthik

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Saravana