முக்கியச் செய்திகள் தமிழகம்

“குற்றச்சாட்டு ஆதாரமற்றது”- எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கறிஞர் பேட்டி

போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 7 மணி முதல் சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை என 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஆர்யபுரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்த காரிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர்.

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆர்யபுரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டிற்கு வருகை தந்த அவரது வழக்கறிஞர் செல்வம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கூறினார்.

Advertisement:

Related posts

இரவு நேரங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கத் தடை!

Halley karthi

தமிழ்நாட்டில் 18 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

Ezhilarasan

50% இருக்கைகளுடன் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும்!

Halley karthi