நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக செங்கோட்டை அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேக்கரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகப்படியான விவசாயிகள் வாழை, தென்னை, பாக்கு, நெல், மாமரம், பலா மரம் உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்பு விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்தன. இதுகுறித்து விவசாயிகள் அளித்த தகவலின்பேரில் வனத்துறையினர் வெடி வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
மீண்டும் பகல் நேரங்களில் யானைகள் கூட்டம் விளை நிலங்களுக்குள் செல்வதை, விவசாயி ஒருவர் செல்போனில் படம்பிடித்துள்ளார். இது தொடர்பான செய்தி நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வெளியானது. இதனடிப்படையில், விளைநிலங்களில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்களை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.