முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்குகோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்தும், தீர்ப்பில் இருந்த தன் மீதான விமர்சனங்களை நீக்கவும் கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு செய்திருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ள அனுமதி கேட்ட இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஜூலை 19 தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு, நடிகர் விஜய்யின் மனுவை மாற்றுமாறு நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழகின் விசாரணையானது நீதிபதிகள் துரைசாமி, ஹேமலாதா அமர்வு இன்று விசாரித்தது. நடிகர் விஜய் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்ற நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசு தரப்புக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வரும் 26 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

Advertisement:

Related posts

மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத்தக்க வகையில் நிதிநிலை அறிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Jeba Arul Robinson

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: மெஸ்ஸியின் அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Vandhana

வாக்களித்த நடிகை நமீதா, குஷ்பூ

Halley karthi