முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், கரூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையானது காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை போன்று 21 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இத்தகவலை அறிந்த அதிமுக நிர்வாகிகள், விஜயபாஸ்கரின் வீட்டில் கூடினர். அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்களை சமர்பித்துவிட்டு சோதனை செய்யுமாறு அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதுபோல சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். விஜயபாஸ்கார் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு எதிராக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.







