ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
டந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனவும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.







