முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உட்பட 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

நாமக்கல் அசோக் நகரில் குடியிருந்து வரும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் பெயரிலும், இவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகமாகும். எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது நேற்று நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புபிரிவு வழக்கு பதிவு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்று காலை நாமக்கல் அசோக் நகரில் உள்ள பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் பல்வேறு குழுக்களால் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் கே.கே நகர் முதல் வீதி அருகே உள்ள ஆர்.ஆர் இன்பிரா கன்ஸ்ட்ரக்சன் என்ற அவரது நண்பருக்கும் சொந்தமான நிறுவனத்தில் 10 மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்ற பட்டதாகவும், தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் வட்டாரம் தகவல்களை தெரிவித்துள்ளது. சோதனையின் முடிவில் எவ்வளவு சொத்துகள், எவ்வளவு வருமானம் சேர்த்துள்ளார் என்பது சோதனையின் முடிவில் தெரியவரும்.

இதையும் படியுங்கள்: மின்சார சட்ட மசோதா; இலவச மின்சார திட்டத்திற்கு பாதிப்பில்லை- எல்.முருகன்

முன்னால் எம்.எல்.ஏ பாஸ்கர் கடந்த 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் நாமக்கல் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். தற்போது இவர் நாமக்கல் நகர அதிமுக செயலாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் அளவுக்கு அதிகமாக சொத்துகள் சேர்ந்ததாக முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீசார் சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Gayathri Venkatesan

பதவியேற்ற கவுன்சிலர்கள் கடத்தல்

Halley Karthik

பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

G SaravanaKumar