திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் திமுக வடக்கு மண்டல 47 தொகுதி வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அமைச்சர்களும் ஏராளமான திமுகவினரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் திமுகவில் இணைந்தார்.
நிலோபர் கபில், கட்ந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.







