ஊட்டி அருகே மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்தால் வாகனஓட்டிகள் செய்வதியாமல் திகைத்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன. வனப்பகுதியில் நிலவிவரும் வறட்சிக் காரணமாகக் காட்டு யானைகள் உணவுத் தேடிக் குடியிருப்புகள் மற்றும் சாலையோரங்களில் உலா வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் இரவு முல்லூர் அருகே ஒற்றைக் காட்டு யானைச் சாலையின் குறுக்கே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. பின்பு, யானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
இதனால், போக்குவரத்துப் பாதிப்பு அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே, வனத்துறையினர் பகல், இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் , சாலைகளுக்கு வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.