பொதுக் கழிவறையில் மனித மலத்தைக் கையால் அள்ள வைத்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என துப்புரவு பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளிப் பேரூராட்சியில் உள்ள 15வது வார்டு பொதுக்
கழிவறையில் கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தூய்மை பணியானது நடைபெற்றது. அப்போது பணியாளர் ஒருவரை கையால் மலம் அள்ள வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பேரூராட்சி அதிகாரிகள் மனித மலத்தைக் கையால் அள்ள வைத்ததுத் தொடர்பாக தேசிய துப்புரவுப் பணியாளர் ஆனையத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து துப்புரவு பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளைத் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளக் கூடாது என்கின்ற சட்ட விதிமுறைக்குப் புறம்பாக இரவுக் காவலர் சங்கரன் என்பவர் மனிதக் கழிவுகளை துப்புரவுப் பணியாளர்களின் கைகளால் அள்ள வைத்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு பரிந்துரைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.








