பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வெளிநாட்டினரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பவுஞ்சூர் கிராமத்தில் ஜெயகிருஷ்ணன் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நேற்று இங்கு வந்த வெளிநாட்டினர், தாங்கள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பார்த்ததில்லை எனவும் அதனை காண்பிக்குமாறும் ஜெயகிருஷ்ணனிடம் கேட்டுள்ளனர். அவரும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைக் வெளிநாட்டினருக்கு காட்டியுள்ளார்.
அப்போது அவரிடம் பேசிக்கொண்டே அங்கிருந்த 83 ஆயிரம் ரூபாயை பேண்ட் பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொண்டு அவர் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் பணம் காணமல் போனதை கண்ட ஜெயகிருஷ்ணன் சிசிடிவி மூலம் வெளிநாட்டினர் பணம் திருடி சென்றதை கண்டறிந்தார். இதையடுத்து உடனடியாக அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வெளிநாட்டினரை தேடி வருகின்றனர்.







