முக்கியச் செய்திகள் தமிழகம்

குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்காகச் சென்ற திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் மர்மமான நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள திருவரங்கநேரியை சேர்ந்த விமலா என்பவர் குடும்ப வறுமை காரணமாக குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். வாரம் ஒரு முறை கணவர் மற்றும் மகன்களிடம் தொலைபேசியில் பேசி வந்த விமலா, தனக்கு உணவு மற்றும் ஊதியம் வழங்காமல், வீட்டு உரிமையாளர்கள் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே விமலா குவைத் சென்று 2 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டதால் அவரை உடனடியாக ஊருக்கு வரும் படி குடும்பத்தினர் அழைத்துள்ளனர்.

ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் அவரிடமிருந்து எந்த தகவலும் வராததால் தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் கணவர் மணி மனு அளித்துள்ளார். இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பின் விமலா உயிரிழந்து விட்டதாக குவைத்தில் இருந்து தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

தமன் இசையில் உருவாக உள்ள ஷங்கரின் தெலுங்கு திரைப்படம்

Ezhilarasan

தமிழ்நாட்டில் புதிதாக 1,859 பேருக்கு கொரோனா தொற்று

Gayathri Venkatesan

மும்பையில் வீடு தேடும் நடிகை சமந்தா!

Jeba Arul Robinson