முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் சிங் ஆகியோருடன் காஷ்மீர் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திரமோடி இன்று மாலை ஆலோசனை மேற்கொண்டார்.

ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தின் மீது தீவிரவாதிகள் 27ம் தேதி அதிகாலை ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானை சேர்ந்த லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று பாதுகாப்புப்படையினர் கூறியுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை இது குறித்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 27ம் தேதியன்று லடாக் செல்லும் முன்பாக இந்த தாக்குதல் நடைபெற்றது.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திரமோடியின் வீட்டில் இன்று மாலை நான்கு மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது காஷ்மீர் நிலவரம் குறித்தும்,ட்ரோன் தாக்குதல் குறித்தும் அவர்களிடம் பிரதமர் விவாதித்துள்ளார்.

Advertisement:

Related posts

சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ்: எஸ்.பி.வேலுமணி கோரிக்கையையடுத்து முதல்வர் அறிவிப்பு!

Halley karthi

பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அதிமுகவுடன் ஆலோசனை

Gayathri Venkatesan

இந்தியா மிகப்பெரிய சோதனை கட்டத்தில் உள்ளது – திருச்சி சிவா

Halley karthi