முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு : அதிர்ச்சியளிக்கும் மருத்துவத்துறை விளக்கம்

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது குறித்து மருத்துவத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், தசை கிழிந்து அதில் இருந்து வெளியேறிய திரவம் சிறுநீரகத்தை செயலிழக்கவைத்ததோடு, உயிரையே எடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, கால்வலியால் கொளத்தூர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு காலில் கட்டுபோட்டுவிட்ட மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், பிரியா உயிரிழப்பு குறித்து மருத்துவத்துறை விளக்கமளித்துள்ளது. அதில், பிரியாவின் காலில் இறுக்கமாக கட்டு போட்டிருந்ததால், தசை கிழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதில் இருந்து மையோகுலோனஸ் என்ற திரவம் வெளியேற முடியாமல் அந்த திரவம் ரத்தத்துடன் கலந்து சிறுநீரகத்தை செயலிழக்கவைத்துள்ளது. மேலும், ஒவ்வொரு உறுப்பாக செயல் இழந்து இறுதியாக உயிரிழப்பு நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்தினர் இது தொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அதன்படி, இந்த வழக்கை சந்தேகத்திற்குரிய மரணம் என பதிவு செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேநேரத்தில், கவனக்குறைவாக பணியாற்றிய மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக-வை விமர்சித்த காமராஜர் – நினைவு கூர்ந்த அமைச்சர் நாசர்

Dinesh A

சாதனை படைத்த திமுக; 30 ஆண்டுகள் கழித்து அயோத்தியா பட்டணத்தில் வெற்றி

Halley Karthik

ரேஷன் கடைகளில் ஜிபே, பேடிஎம் வசதி: எந்த பிரச்னையும் வராது – அமைச்சர் ஐ.பெரியசாமி

Web Editor