மழை உலகம் தமிழகம்

மீண்டும் விளையாட்டு திடலில் கரைபுரளும் உற்சாகம்

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் மீண்டும் உடற்கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சியில் களமிறங்கியுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் மிகுந்த பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தது. பள்ளி செல்ல முடியாமலும், போதிய உடற்கல்வி இல்லாமலும் குழந்தைகள் வீட்டினுள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து, பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்தலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை மணலி சின்னசேக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இருந்து, பல்வேறு ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை குவித்த மாணவ, மாணவிகள், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் அரசு பள்ளி விளையாட்டுத் திடலில் உற்சாகமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஹாக்கி பயிற்சியில் மிக உற்சாகத்துடன் ஈடுபட்டு வரும் மாணவிகள், இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவிக்க வேண்டும் என்பதே தங்களின் இலக்கு என கூறுகின்றனர். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாட்டு திடலுக்கு வந்து பயிற்சி மேற்கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக வெறிச்சோடி காட்சியளித்த பள்ளி மைதானங்கள், தற்போது மாணவ, மாணவியரின் விளையாட்டு பயிற்சியால் உயிர் பெற்றிருக்கின்றன என்றால் மிகையில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிகரிக்கும் போதை பொருள் கலாசாரம்-பாமக போராட்டம் அறிவிப்பு

G SaravanaKumar

நிவர் புயல்: வெள்ளப் பாதிப்பை பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்!

Dhamotharan

10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்

Vandhana