ஹாங்காங்கை அச்சுறுத்தும் கொரோனா தொற்று.

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் ஹாங்காங் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.   கொரோனா தொற்றுக்கான…

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் ஹாங்காங் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

கொரோனா தொற்றுக்கான தொடக்கப்புள்ளியாக இருந்தது சீன நாடுதான். அனைத்து நாடுகளும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுக் கடந்த சில காலமாகத்தான் மீண்டெழுந்து வருகின்றன. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மறுபடியும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து சிகிச்சை பெறுபவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் 95 சதவீதம் படுக்கைகள் நிரம்பி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. படுக்கை வசதி கிடைக்காதவர்களைத் திறந்த வெளியில் படுக்க வைத்து மருத்துவம் பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.கொரோனா பரவல் அதிகரிப்பால் ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் வரும் 6 வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஹாங்காங் தலைவர் கேரி லாம் கூறுகையில், கொரோனா பரவல் அதிகரிப்புக்கு முழு ஊரடங்கு என்பது தீர்வல்ல. கொரோனா வைரஸ் தொற்றின் அலையால் ஹாங்காங் தலைமை நிர்வாகி தேர்தல் 6 வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது. தலைமை நிர்வாகி தேர்தல் மார்ச் 27-ம் தேதி நடைபெற இருந்த நிலையில், மே 8ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹாங்காங்கில் கொரோனா தொற்று மறுபடியும் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் அம்மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.