வங்காளதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 51 ஆக உயர்வு!

வங்கதேசத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலர் 51 உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தில் கடந்த பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சட்டோகிராம், காக்ஸ் பஜார், பந்தர்பன், ரங்கமதி, கக்ராச்சாரி, மவுல் பஜார், ஹபிகஞ்ச் என 7 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 918 வீடுகள் வெள்ள பாதிப்பில் சிக்கி உள்ளன. மேலும் சாலைகள், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர், மின்வெட்டு எதிரொலியாக மக்கள் தங்கள் இருப்பிடங்களிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் மழை, வெள்ளத்திற்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளை, கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவற்றில் அதிக அளவாக காக்ஸ் பஜார் மாவட்டத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டோகிராம் பகுதியில் 13 பேர், பந்தர்பன் பகுதியில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பலர் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ரோகிங்கியா முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.