திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு…!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ளது. முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும், எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த 6 தொகுதிகளும் இதில் அடக்கம்.

காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன் படி தமிழ் நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் வெங்கடாஜலபதி கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் இடைத்தேர்தல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டால் அந்த மனுவின் விசாரணையின் போது தனது தரப்பு கருத்தைக் கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்ககூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.