அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இனாம் நிலங்களை கோவில் நிலம் என கூறி வருகின்றனர். இனாம் நிலத்துக்கும், கோவில் நிலத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகின்றனர். இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலமாக அந்த இடங்களுக்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது.
பட்டா வாங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனது உறவினர் ஒருவர் ரூ.100 கோடிக்கு நிலம் வாங்கியதாக பொய்ச்செய்தி பரப்புகின்றனர். அரசு மீது ஊழல் கரையை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றனர். இந்த விஷயத்தில் சார்பதிவாளர் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கோவில் நிலங்களில் ஒரு இஞ்ச் நிலங்களை யாருக்கும் கொடுக்க எங்களுக்கு விருப்பம் கிடையாது. கோவில் நிலங்களை யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கவில்லை. பொய், பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.




