கரூர் கோயில் நில பட்டா விவகாரம்: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

கரூர் கோயில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த அரசாணைக்கு தடைக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 4 கோயில்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளது.

இந்த நிலங்களை 3390 தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை அண்மையில் நீக்கி தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தமிழகஅரசின் இந்த முடிவுக்கு இந்து ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு ஒன்று செய்யப்பட்டது. அதில் கரூர் கோயில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த அரசாணையை தடை செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் வழக்கை முறையாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.