வைகையில் வெள்ளப்பெருக்கு; 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் முதல்முறையாக 10538 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த…

வைகை அணையில் முதல்முறையாக 10538 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி என்ற போதும் 69 அடி முழு கொள்ளவாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டிடும் போது மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
விடுக்கப்படும்.

இந்த நிலையில் ஏற்கனவே கடந்த ஒரு சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் கனமழையால் வைகை அணை ஏற்கனவே 70 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது.  நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3780கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் தேனி மதுரை சிவகங்கை ராம்நாடு மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை ஆற்று கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வருகின்ற நீரை அப்படியே 3780 கனநீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.


இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்ததால்
இரவு 10 மணி நிலவரப்படி 8,846 கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. தற்போது அணைக்கு வரும் 10,538 கன அடி நீர் அப்படியே உபரிநீராக வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டு வைகை அணை பலமுறை அட்டியை எட்டி நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு இருந்தாலும் முதல் முறையாக அணைக்கு அதிகப்படியான நீர்வரத்தான 10538 கன அடி உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

இதனால் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை,
இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் பாதுகாப்பாக இருக்கும் படியும் பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து தற்போது தேனி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து, அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் மீண்டும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதால் பொதுப்பணித்துறையினர் அணை நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஒரே ஆண்டில் வைகை அணையின் நீர்மட்டம் பலமுறை 70 அடி எட்டி உள்ளது. அதேபோல அணையின் முழு உயரமான 71 அடியை இதுவரையிலும் ஆறு முறை எட்டியது உள்ளது.  இந்த ஆண்டு முதல் முறையாக அணைக்கு வினாடிக்கு 10538 கன அடி நீர் வந்ததும் அது உபரிநீராக வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.