குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து…

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி போலீசார் தற்போது அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மழைக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்த இடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ்பெற்றது.

இது திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கிமீ தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.