மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமில்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது
அரபி கடலில் உருவான டவ் தே புயல், காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதையடுத்து தென்காசி மாவட்டத்திலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில், ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி குற்றால அருவிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







