டவ் தே புயல்: மும்பைக்கு கனமழை எச்சரிக்கை!

டவ் தே புயல் மும்பை மற்றும் கோவா இடையே மையம் கொண்டுள்ளதால், மும்பைக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபி கடலில் உருவான டவ் தே புயல், தற்போது கோவாவின் பான்ஜிம் பகுதியில் இருந்து…

டவ் தே புயல் மும்பை மற்றும் கோவா இடையே மையம் கொண்டுள்ளதால், மும்பைக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபி கடலில் உருவான டவ் தே புயல், தற்போது கோவாவின் பான்ஜிம் பகுதியில் இருந்து தென் மேற்காக, 170 கிலோ மீட்டர் தூரத்திலும், மும்பையில் இருந்து தெற்கு பகுதியில், 520 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது குஜராத் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. குஜராத்தின் போர்பந்தர்-மவுகா இடையே, 17ம் தேதி இரவோ அல்லது 18ஆம் தேதி அதிகாலையோ கரையக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டவ் தே புயல் தாக்கத்தின் எதிரொலியாக, கோவா மாநிலத்திலும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும், கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.