வெள்ள பாதிப்பு – தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி!

தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து  நிவாரண பொருட்களை வழங்கினார். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால்…

தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து  நிவாரண பொருட்களை வழங்கினார்.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த பயணிகளை மீட்கும் பணிகள் தொடக்கம்!

இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும், போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென் மாவட்டங்களில் ரயில்வே அனைத்தும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி,  திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு  தீவிரமாக உள்ளதால் பல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.