முக்கியச் செய்திகள் இந்தியா வணிகம்

30 கோடி வாடிக்கையாளர்களை கவர பிளிப்கார்ட் திட்டம்!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வர்த்தகம் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ள பிளிப்கார்ட் நிறுவனம் நாட்டில் 20 கோடி முதல் 30 கோடி மக்களுக்கு நேரடியாக மளிகை பொருட்களை விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இது தொர்டாக பிளிப்கார்ட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த 6 மாதங்களாகவே மூன்று மடங்கு தன்னுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது நகர் பகுதிகளில் அதிகரித்துள்ளது.

ஸ்மாட்போன்களில் இருந்து பெறப்படும் ஆர்ட்ர்களின் எண்ணிக்கை என்பது 40% உள்ளது. பேஷன் பொருட்களை 30 % பேர் ஆர்டர் செய்கிறார்கள். மீதமுள்ள எண்ணிக்கையில் வீட்டிற்குத் தேவையான பொருட்கள், புத்தகங்கள், மரச்சாமான்கள் மற்றும் மளிகை ஆகியவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் 2024-ம் ஆண்டிற்குள் ஆன்லைன் மூலம் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யும் விகிதம் அனைத்து நிறுவனங்களைச் சேர்த்து 18.20 கோடியாக இருக்கும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களின் விகிதம் 1.9 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் வர்த்தகத்தில் பிக் பேஸ்கட், அமேசான், பிரெஷ் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மார்ட் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கலத்தில் உள்ளனர். இவர்கள் மத்தியில் பிளிப்கார்ட் நிறுவனம் தன்னுடைய சந்தையை 30 கோடி மக்களுக்கு நேரடியாகப் பொருட்களை விற்பனைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த ஆண்டு தொடக்கத்தில்தான் ஆன்லைன் மூலம் மளிகை பொருட்களை விற்பனைச் செய்யத் தொடங்கியது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ‘flipkart Quick’ என்ற திட்டத்தைத் தொடங்கி 90 நிமிடங்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது. இதற்காக உள்ளூர் சிறு நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு பொருட்களை உரிய நேரத்தில் டெலிவரி செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கர்ப்பிணி பூனையைக் காப்பாற்றிய 4 பேர்: மன்னர் கொடுத்த ஆச்சரிய பரிசு

Gayathri Venkatesan

கங்காரு பொம்மை வடிவ கேக்கை வெட்ட மறுத்த ரஹானே; ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Jayapriya

பிரபல நடிகருக்கு தோள்பட்டை அறுவைச் சிகிச்சை

Halley karthi