முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் வணிகம்

அதானி குழுமத்துடன் கைகோர்த்த பிளிப்கார்ட் நிறுவனம்!

ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் முக்கிய நிறுவனமாக செயல்பட்டுவரும் பிளிப்கார்ட் நாட்டின் முக்கிய தொழில் நிறுவனமான அதானி குழுமத்துடன் கைகோர்த்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் வேகமாக அதிகரித்துவரும் வாடிக்கையாளர்கள் சேவை திறனை மேம்படுத்தவும் அதானி குழுமத்தின் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் உடன் இணைந்து பிளிப்கார்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

அதானி குழுமத்தின் சார்பாக மும்மையில் 5,34,000 சதுர அடியில் கட்டப்பட்டுவரும் லாஜிஸ்டிக் கட்டிடம் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த லாஜிஸ்டிக் கட்டடத்தின் மூலம் ஒரே நேரத்தில் ஒரு கோடி வாடிக்கையாளர்களுக்கான பொருட்களை இங்கு சேமிக்க முடியும். இந்த கட்டிடத்தின் பயன்பாடு அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நிறுவனங்களின் ஒப்பந்தம் காரணமாக நாட்டில் நேரடியாக 2,500 பேருக்கும் மறுமுகமாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
இது குறித்த பேசிய அதானி குழுமத்தின் முதன்மை நிர்வாக அலுவலகர் கரன் அதானி, எங்கள் இரு நிறுவனங்களும் இணைந்திருப்பது நாட்டில் வேகமான வர்த்தகத்தை ஊக்குவிக்க உதவியாக இருக்கும். நாடு முழுவதும் லாஜிஸ்டிக் மற்றும் தரவுகளை ஒன்றிணைத்து வேலைச் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்த முயற்சி வார்த்தக துறையில் புதிய திட்டமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
பிளிப்கார்ட் நிறுவனம் தங்களுடைய 3-வது தரவு மையம் (Data Centre) விரைவில் சென்னை அமைக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

அம்மா உணவகத்தின் பெயர்ப் பலகை கிழிப்பு: இருவர் திமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

Halley karthi

புதுச்சேரி: நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது!

Ezhilarasan

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

Halley karthi