தெலங்கானா மாநிலத்தில் பிளிப்கார்ட் உதவியுடன் ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுப்பதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. இதில், சரியான போக்குவரத்து வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்வது அரசுக்கு பெரும் சவாலான காரியமாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் இதுபோன்ற பேரிடர் காலங்களில் அத்தியாவசிய பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக எடுத்து செல்ல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டுடன் அம்மாநில அரசு கைகோர்த்துள்ளது.
அதன்படி, வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கு ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் உதவியுடன் ட்ரோன் மூலம் தடுப்பூசி மற்றும் மருந்து பொருட்களை கொண்டு செல்லப்பட உள்ளன. முதலில் 6 நாட்களுக்கு தடுப்பூசிகளை ட்ரோன் மூலம் அனுப்பி சோதனை நடத்தப்பட உள்ளன. அதன்பின்னரே முழுவதுமாக இந்த திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.