டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை அதிகரிக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் கொரொனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்யேந்திர ஜெயின் மற்றும் சுகாதாரத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் சில மருத்துவமனைகளை கொரோனா மருத்துவமனைகளாக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், கொரோனா தடுப்பூசிக்கு தகுதியான அனைவரும் உடனடியாக தடுப்பூசியை போடக் கொள்ளும் கேட்டுக் கொண்டார்.







