நாம் தமிழர் கட்சியின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை கிண்டியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு 2026-ஐ (தேர்தல் அறிக்கை) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். அந்த வகையில் 49 தலைப்பில், 462 பக்கத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சென்னை, திருச்சி, கோவை, குமரி, மதுரை ஆகிய 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும்.
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
நீதிமன்ற படிவங்கள் அனைத்தும் தமிழில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
மாநில நீதிமன்றத்தில் அந்த மாநிலத்தவர் தலைமை நீதிபதியாக சட்டம்.
3 சட்டமன்ற தொகுதிக்கு 1 பாராளுமன்ற தொகுதி என வலியுறுத்தப்படும்.
குடியரசு தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வலியுறுத்துவோம். குடியரசு தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும், மக்களால் தேர்வு செய்யப்படாத எவரும் மக்களை ஆட்சி செய்ய அதிகாரமில்லை.
மாநிலங்களவை உறுப்பினராகி அமைச்சராகும் முறையை மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வர நாம் தமிழர் கட்சி போராடும்.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை பெற்று தர ஏற்பாடு.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு முறையை நீக்கிவிட்டு வாக்குச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும்.
நன்கொடை ரசீது போல் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வாக்கு செலுத்தியவருக்கு அதற்கான ரசீது வழங்கப்படும்.
இட படங்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் 75 சதவீதம் கிடைக்க போராட்டம்.
தூய தமிழ் மொழியில் மருத்துவ கல்வி கற்க ஏற்பாடு.
பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனித்தொகுதியை போல் பெண்களுக்கு தனித்தொகுதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், 15 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கிறோம். 10 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் இருக்கிறோம். பணம் இருப்பவர்கள் தான் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மாற்றி மனம் இருப்பவர்களுக்கும் தேர்தலில் நிற்க வேண்டும். உலகம் முழுவதும் நேசித்து வந்த பேரினத்தின் பிள்ளைகள் இந்த உலகத்தில் இருந்து தான் வாழப்பழகினான், தேர்தல் அறிக்கை என்று இல்லாமல் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு கொடுக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.







