நடுவூர் மாதாகுப்பத்தில், மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக நடவடிக்கை எடுக்காத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து – மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் போரட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு நடுவூர் மாதாகுப்பத்தில், பாலையா மற்றும்
சந்தனராஜ் ஆகியோர் இடையே மீன் பிடிப்பு இடங்களை தீர்மானிப்பதில் மோதல் நடந்து வந்தது.இந்த கோரிக்கையை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சார் ஆட்சியரிடம் முறையிட்டும் , உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
90 நாட்களாகியும் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க முடியதாதல், மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களிடம் மீன்வளத் துறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி 3 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து , அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—கு.பாலமுருகன்