வெகுவிமரிசையாக நடைபெற்ற ஸ்ரீஆதிபராசக்தி ஆலய குடமுழுக்கு விழா!

அதிராம்பட்டினம் அருள்மிகு ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா  வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த ஆறுமுககிட்டாங்கி தெருவில், ஆதிபராசக்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதை தொடர்ந்து இக் கோயிலில் குடமுழுக்கு…

அதிராம்பட்டினம் அருள்மிகு ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா  வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த ஆறுமுககிட்டாங்கி தெருவில், ஆதிபராசக்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதை தொடர்ந்து இக் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நான்கு கால யாகசாலைகள் அமைத்து பூஜைகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து ஆதிபராசக்தி அம்மன் கோயிலின் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.பின்னர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

தொடர்ந்து  இவ் விழாவில் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டு  அம்மனின் அருளை பெற்று சென்றனர்.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.