மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் – ராதாகிருஷ்ணன் தகவல்

மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள், வரும் திங்கள்கிழமை தொடங்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்திலுள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்லூரி…

மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள், வரும் திங்கள்கிழமை தொடங்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கத்திலுள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவில், 6,ஆயிரத்து 43 பேருடைய இணையவழி கலந்தாய்வு முடிவுகள் வெளியிடபட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 76 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதாகவும் ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் 3 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன எனவும் தெரிவித்தார். மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 136 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன என்றார்.

அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 6 பிசிஎஸ் இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 375 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன என தெரிவித்த அவர், மீதமுள்ள இடங்களுக்கு இன்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை பொதுப்பிரிவினர் தவிர்த்து ஏனைய பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைன் நடைபெறும் என்றார்.

வரும் திங்கள்கிழமை முதல் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.