நாட்டில் மத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் நகராட்சியில் தேர்தல் பரப்புரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து பாஜக குறித்து கடுமையாக விமர்சித்தார்.
நாடு முழுவதும் மதக் கலவரத்தை ஏற்படுத்துவது பாஜக மூலதனமாகக் கொண்டு இருக்கிறது எனவும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மோதலை
ஏற்படுத்தும் நான்காம் தர அரசியலிலைதான் பாஜகவிடம் கையிலிருக்கிற கொள்கை எனவும் சாடினார். ஆனால் தமிழ் நாட்டில் மத கலவரத்தை எப்போதும் அனுமதிக்க மாட்டோம் அதனை எதிர் கொள்வோம் எனவும் இப்படிப்பட்ட கலவரம் வேண்டும் என்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டது எனக் கூறினார்.
மேலும் பாரதிய ஜனதா கட்சி நாட்டின் விடுதலை பற்றியும், விடுதலைப்போராட்டத்தில் பங்கு பெற்ற கட்சியும் இல்லை விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கூட்டம்
தான் ஆட்சியில் இருக்கிறது என கடுமையாக விமர்சித்தார்.
விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த வா.உ.சிதம்பரனார், பாரதியார், வேலுநாச்சியார், பற்றி தெரியவில்லை எனவும் ஆனால் காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கோட்சேவை மற்றும் அவர்களுக்கு தெரிகிறது எனவும் பல்வேறு குற்றம் சாட்டினார் முத்தரசன்.







