IND VS WI: வெஸ்ட் இண்டீஸை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இன்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் இரு…

வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இன்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி பெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.  இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3வது போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. ஆட்டத்தின் இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 சேர்த்தது.

266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர் இந்திய அணியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். 37.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.