முதலில் ஆவின் பாலை தரமாக கொடுக்க முயற்சியுங்கள் – டாக்டர் கிருஷ்ணசாமி சாடல்

தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை உயர்ந்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, முதலில் ஆவின் பாலை தரமாக கொடுக்க முயற்சியுங்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.   தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…

தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை உயர்ந்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, முதலில் ஆவின் பாலை தரமாக கொடுக்க முயற்சியுங்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

 

தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு மாநாடாக நடைபெற உள்ளது. இதில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள் என்றார். தமிழகத்தில் அமைதியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நவம்பர் 17-ம் தேதி பல சமூக அமைப்புகள், மத அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் என பலர் கலந்து கொள்ளும் ஒற்றுமை பேரணி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழகத்தின் அனைத்து பகுதியினரும் கலந்து கொள்ள வேண்டு என கேட்டுக்கொண்டார்.

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவிற்கும் பல நாடுகளுக்கும் கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இயற்கை சூழ்ந்த தென்காசி பகுதி சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றப்பட வேண்டுமானால் கனிம வள கொள்ளைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகள் கொடுத்தன. ஆளுநர் அவருடைய கருத்துக்களை பகிர்கிறார். அதற்கு ஆளுனரே திரும்பபோ என்பதை எப்படி பார்ப்பது என தெரிவித்தார்.

இதற்கு முன் மாநில அரசு சொல்லி எந்த ஆளுநர் திரும்ப பெற்ற வரலாறு உண்டா என கேள்வி எழுப்பிய அவர், ஆளுநர் திரும்ப பெறுவதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றார். பால் பதப்படுத்தப்படுவது மேலை நாடுகளுக்கு பொருந்தும். அங்குள்ள தட்ப வெட்ப நிலைக்கு பொருந்தும். முதலில் ஆவினை தரமாக தர முயற்சிக்க வேண்டும். தண்ணீரை அளவோடு கலக்க வேண்டும் என குற்றம்சாட்டினார். ஆவின் பாலை தரமாக கொடுத்த பிறகு நீங்கள் முடிவெடுக்கலாம் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.