உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ம் தேதி உருவாகி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை…

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ம் தேதி உருவாகி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கன்னியாகுமரி, நெல்லை, கோவை, தென்காசி ஆகிய இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே உருவாகும் குறைந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி தமிழகம், புதுவையை நோக்கி நகரக்கூடும். அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்யும்” என்று தெரிவித்தார்.

குமரி, நெல்லை, கோவை, தென்காசி ஆகிய இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்த அவர், “12 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை தண்டையார்பேட்டையில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். 10, 11 ஆகிய தேதிகளில் கரையை கடக்கும் சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்” என்று கூறினார்.

மேலும், “ மீனவர்கள் 8, 9ம் தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.