முக்கியச் செய்திகள் விளையாட்டு

நியூசிக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேப்டனாக ரகானே நியமனம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி கான்பூரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பையிலும் தொடங்குகிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டன் ரகானே கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துகிறார்.

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா ( துணை கேப்டன்), சப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் சாஹா ( விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பரத், ரவீந்திர ஜடேஜா, அஷ்வின், அக்சர் பட்டேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த், பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டி 20 போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில், ரோகித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

ஷங்கர் பட ஹீரோயின் இவர்தான்: உறுதிப்படுத்தியது படக்குழு

Gayathri Venkatesan

திருவொற்றியூர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்!

Saravana Kumar

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்துதான் முதல் பரிசு: விசாரணை அறிக்கையில் தகவல்!

Nandhakumar