முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய காரை பயன்படுத்தும் காரணம் இதுதான்

சென்னையில் மழை பாதிப்புக்களை ஆய்வு செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கமாக பயன்படுத்தும் வாகனத்திற்கு பதிலாக, சிவப்பு நிற மஹிந்திரா தார் வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். அதற்கான காரணம் என்ன, அந்த வாகனத்தின் சிறப்பம்சம் என்ன? என்பதை பார்க்கலாம்.

வடகிழக்கு பருவமழை என்றாலே முன்னேற்பாடுகளை உடனடியாகச் செய்துவிட வேண்டும் எனகிற அளவிற்கு படிப்பினைகளை கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மக்கள் அனுபவித்துள்ளனர். இருப்பினும் இயற்கையின் விளையாட்டை கணிப்பது சிரமம். அப்படி மீண்டும் சென்னையை அச்சுறுத்தி வரும் மழையில் சுழன்று சுழன்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

குறிப்பாக அவர் பயன் படுத்தும் சிவப்பு நிற மஹிந்திரா தார் வாகனமும் கவனத்தை ஈர்த்துளது. அந்த வாகனம் கவனம் ஈர்க்க காரணங்கள் உண்டு… கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் ஆரம்ப விலையாகக் கொண்ட வெளிநாட்டு இறக்குமதியான முதலமைச்சரின் டொயோட்டா பிராடோவை ஓரங்கட்டி தார் முன்னிலை பெற்றுள்ளதே அது. SUV வகை வாகனமான LAND CRUISER என்னதான் அசகாய சூரனாக இருந்தாலும் சுமார் 12 லட்சரூபாய் மதிப்பிலான தார் எந்த சூழலிலும் எந்த சாலையிலும் கையாளும் வசதி கொண்டது.

மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் வாகனமாக மஹிந்திராவின் தார் வாகனம் இருக்கிறது. அதேபோல் அட்வெஞ்சர் டிராவல் செய்வோரும் அதிகம் விரும்பும் வானங்களின் பட்டியலில் இந்த தார் வாகனம் முக்கிய இடம் பிடிக்கிறது. காரணம் இந்த காரின் ENGINE மற்றும் AIR FILTER மற்ற கார்களை விட உயரத்தில் இருப்பதால் இடுப்பளவு வெள்ளம் உள்ள பகுதிகளில் கூட எளிதாக செல்லும், மலையோ சமவெளியோ, பள்ளத்தாக்கோ, கடற்கரையோ அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இந்த காரை இயக்க முடியும்.

அந்த வகையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் இந்த காரை பயன்படுத்தி வருவது முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது… அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்கள் எப்படிப்பட்ட பகுதியில் இருந்தாலும் அவர்களை நேரில் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற முதலமைச்சரின் எண்ணமும் முக்கிய காரணம். முன்னதாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காகவும், சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு செல்வதற்காக மட்டுமே மு.க.ஸ்டாலினால் பயன்படுத்தப்பட்ட இந்த தார் வாகனம், தற்போதைய சூழலில் சிறிதும் அஞ்சாமல் களத்தில் தடம் பதிக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும்:டி.ராஜேந்தர் பேச்சு!

Jeba Arul Robinson

கனிமொழிக்கு கொரோனா தொற்று!

Halley karthi

கோயில் வாசலில் பிச்சை எடுக்கும், அரசுத்துறையில் பணியாற்றிய பெண்

Halley karthi