‘முதல் பருவத் தேர்வினை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்’: ஓபிஎஸ் வலியுறுத்தல்

முதலாமாண்டு பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வினை தள்ளி வைக்கவும், ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல்…

முதலாமாண்டு பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வினை தள்ளி வைக்கவும், ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக நடைபெற்றறது. இந்நிலையில், முதல் பருவத் தேர்வினை நேரடியாக நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பது கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: “சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு: போராட்டம் அறிவிப்பு”

மேலும், கொரோனா கொடுந்தொற்று காரணமாக பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை முதலாமாண்டு பயிலும் மாணவ மாணவியர் எழுதாத சூழ்நிலையில், முதலாமாண்டு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வகுப்பறைகளில் போதுமான நேரம் கொடுக்கப்படாத சூழ்நிலையில், அவர்களுக்கு நேரடித் தேர்வினை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பது கவலை தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எட்டாம் பருவத் தேர்வைத் தவிர அனைத்து பருவத் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தநிலையில், வகுப்பறைகளில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற அவர், இதுதொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்துவதாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.