மது போதையில், பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த நண்பன்

மது போதையில் ஏற்பட்ட தகராறில், 15வயது சிறுவனை பீர் பாட்டிலை உடைத்து குத்தி நண்பனே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அமைந்துள்ளது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இதன்…

மது போதையில் ஏற்பட்ட தகராறில், 15வயது சிறுவனை பீர் பாட்டிலை உடைத்து குத்தி நண்பனே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அமைந்துள்ளது அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இதன் பின்புறத்தில் புழல் ஏரி கரை இருக்கிறது. இங்கு உள்ள முட்புதரில், சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பதாக, அவ்வழியே சென்ற பொதுமக்கள் செங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு வயிறு, கழுத்து பகுதியில் குத்தப்பட்டு கிடந்ந்த ஆண் சடலத்தை கைப்பற்றி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என விசாரணையை தொடங்கியது காவல்துறை. முதற்கட்ட விசாரணையில், படுகொலையானது, நாரவாரிகுப்பம் நேதாஜி தெருவை சேர்ந்த கோபி என்பவருடைய, 15 வயது மகன் நாகராஜ் என்பது தெரியவந்தது.

அண்மைச் செய்தி: ‘முதல் பருவத் தேர்வினை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்’ – ஓபிஎஸ் வலியுறுத்தல்

இந்த கொலை சம்பவம் தொடர்பாக நேதாஜி தெருவை சேர்ந்த 19 வயதான அர்ஜுன் என்பவரை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அர்ஜுனும், நாகராஜனும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். இரவு நேரங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி கடந்த 14 ஆம் தேதி அன்று மாலை வேலையில் மது குடிக்க, புழல் ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர். மது அருந்தி விட்டு போசிக்கொண்டிருந்த போது இருவருக்கு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அர்ஜுன், கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து, நாகராஜின் வயிறு, கழுத்து பகுதியில் பலமாக குத்தி விட்டு அங்கிருந்து சென்றதாக, காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அர்ஜுன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர். மது போதையில் நடந்த தகராறில் 15வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.