சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு: போராட்டம் அறிவிப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி வரும் 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்ப கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட…

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி வரும் 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்ப கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 400 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 3 லட்சம் என 7 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில வருடங்களாக பட்டாசு தயாரிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் உச்சநீதிமன்றம், பேரியம் நைட்ரேட் போன்ற மூலப்பொருளை சேர்க்கக் கூடாது எனவும், சரவெடி தயாரிக்கவும் தடை விதித்துள்ளது.

அண்மைச் செய்தி: “வி.கே.சசிகலா 2ம் கட்ட சுற்றுப்பயணம்: செங்கல்பட்டு, மேல்மருவத்தூரில் சாமி தரிசனம்”

இதனால், 20 சதவீத பட்டாசு மட்டுமே தயாரிக்கப்படுவதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி வரும் 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், பெரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி பட்டாசு தயாரிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் எனவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள அவர்கள் தங்களின் கோரிக்கையை ஏற்று, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.