பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்: தமிழக அரசு!

அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு கடந்த ஆண்டுக்கான பருவத் தேர்வுகள் நிகழ்நிலைத் தேர்வாக கடந்த பிப்ரவரி மாதம்…

அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு கடந்த ஆண்டுக்கான பருவத் தேர்வுகள் நிகழ்நிலைத் தேர்வாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்கள் சிலர் தங்களுக்கு மதிப்பெண்கள் குறைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சித்தரம்தான் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு மீண்டும் மறுதேர்வுகள் நடைபெறும் என தெரிவித்தார். தேர்வுகள் நிகழ்நிலைத் தேர்வாக ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.