நாளை வெளியாகிறது #Manikandan நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

மணிகண்டன் நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (செப்.28) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய் பீம், சில நேரங்களில் சில மனிதர்கள்,…

மணிகண்டன் நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (செப்.28) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய் பீம், சில நேரங்களில் சில மனிதர்கள், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து சிலரது மனங்களையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லவ்வர்’ (lover) திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கி இருந்தார்.

இதில் ஸ்ரீகௌரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இவர் தற்போது, சினிமாக்காரன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (செப்.28) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.