முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

ஓமைக்ரான் பரவும் முதல் புகைப்படம் வெளியீடு

ஒமைக்ரான் வைரஸ் பரவும் முதல் புகைப்படத்தை ரோமில் உள்ள ஆராய்ச்சியாளர் கள் வெளியிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது ’ஒமைக்ரான்’ வைரஸ். 50 உருமாற்றங்களைக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்கா உட்பட சில ஆப்பிரிக்க நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன.

அங்கிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஒமைக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? வேகமாக பரவுமா என்பது குறித்து இதுவரை எந்த தரவுகளும் தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் 8 உருமாற்றங்களை அடைந்தது. ஒமைக்ரான் வைரஸ், 50-க்கும் மேற்பட்ட உருமாற்றங்களை கொண்டிருக் கிறது. அதில், 32 மாற்றங்கள் ஸ்பைக் புரோட்டீன் ( வெளிப்புற புரதம்)களில் நிகழ்ந்துள் ளன. இதனால் உடலில் உள்ள கொரோனா எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி ஆற்றல் இப்போது பயன்படுத்தப்படும் மருந்துகள், ஓமிக்ரானுக்கு எதிராக வேலை செய்யாமல் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ரோமில் உள்ள புகழ்பெற்ற பாம்பினோ கெசு (Bambino Gesu) மருத்துவ மனை ஆராய்ச்சியாளர்கள், ஒமிக்ரான் மாறுபாட்டின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்திய வரைபடத்தை போல தோற்றமளிக்கும் இந்த உருமாற்ற புகைப்படத்தில் இந்தியவில் உருமாறிய டெல்டா வைரஸை விட, ஓமிக்ரான் இரண்டு மடங்கு உருமாற்றங்களை கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

Advertisement:
SHARE

Related posts

பாகிஸ்தானில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 13 உயிரிழப்பு!

Dhamotharan

கொரோனா போர்க்கால அறை: தமிழக அரசு!

கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!

Gayathri Venkatesan