பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசி. எம்.பி!

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனை சென்று குழந்தை பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நியூசிலாந்தில் பசுமை கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி ஜென்டர் (Julie Genter). 41 வயதான…

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனை சென்று குழந்தை பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நியூசிலாந்தில் பசுமை கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி ஜென்டர் (Julie Genter). 41 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து யாரும் செய்யாத புதுமையை அவர் செய்தார். அதாவது அவர் வீட்டின் அருகிலேயே மருத்துவமனை இருந்ததால், சைக்கிளை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓர் அழுத்து அழுத்தினார்.

பிரசவ வலியுடன் சைக்கிளை ஓட்டி மருத்துவமனை சென்ற அவர், உடனடியாக அங்கு அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நிமிடத்தில் அவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை மற்றும் கணவருடன் ஜூலி இருக்கும் புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பிரசவ அனுபவம் குறித்து பேஸ்புக்கில் எழுதியுள்ள ஜூலி, அதிகாலை 3.04 மணிக்கு எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்றோம். பிரசவத்தின்போது சைக்கிளில் செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், அப்படி நடந்தது. இப்போது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான எங்கள் குழந்தை அருகில் தூங்குகிறது, அவளின் அப்பாவை போலவே” என குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தில் புதுமையான முறைகளை பின்பற்றும் அரசியல்வாதிகள் அதிகம் உள்ள னர். பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பதவியில் இருந்தபோது மகப்பேறுக்காக 3 மாதம் விடு முறை எடுத்தார். பிறகு குழந்தையுடன் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.