முக்கியச் செய்திகள் இந்தியா

சொத்து கேட்டு மகன் தொல்லை: அதிரடியாக முடிவெடுத்த வித்தியாச தந்தை!

மகன் சொத்தை பிரித்து தரக் கேட்டு பிரச்னை செய்ததால், மொத்தை சொத்தையும் மாஜிஸ்திரேட் பெயருக்கு தந்தை எழுதி வைத்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பிபல்மண்டி நிரலாபாத் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சங்கர் பாண்டே (83). புகையிலை வியாபாரம் செய்து வரும் இவருக்கு அந்தப் பகுதியில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இவரின் மூத்த மகன் திக் விஜய், சொத்தில் ஒரு பகுதியை தனக்கு எழுதி தருமாறு அவரிடம் கேட்டு வந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் பிரச்னை.

இந்நிலையில் திடீரென்று தனது சொத்துகள் முழுவதையும் ஆக்ரா மாஜிஸ்திரேட் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். இதுபற்றி கணேஷ் சங்கர் பாண்டே கூறும்போது, எனது மூத்தமகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து என்னிடம் சொத்துக்களை கேட்டுவந்தார். அவருடன் உட்கார்ந்து பேச முற்பட்டேன். அவர் என்னை மதிக்கவில்லை. என் வார்த்தைகளை கேட்க முன்வரவில்லை.

தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் பெயரில் எழுதி வைத்துவிட்டேன். எனது மரணத்துக்குப் பிறகு அரசு இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்’ என்றார்

இதிபற்றி நகர மாஜிஸ்திரேட் பிரதிபால் சிங் கூறும்போது, ‘பாண்டே என்னை சந்தித்தார். தனது மகன் தொந்தரவு செய்வது பற்றி கூறினார். மொத்த சொத்துக்களையும் மாஜிஸ்திரேட்டுக்கு எழுதி வைத்துள்ளார். இதுபற்றி மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளோம்’ என்றார்.

மகன் பிரச்னைக்காக சொத்துக்களை மாஜிஸ்திரேட் பெயருக்கு எழுதி வைத்திருப்பது, அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

6 மாதங்களில் ரூ.4.16 கோடி அபராதம் வசூல் – மதுரை ரயில்வே கோட்டம்

Halley Karthik

நட்பிற்கு ஏது பாகுபாடு: மீனுடன் நட்புக்கொண்ட மனிதன்!

Halley Karthik

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்

Gayathri Venkatesan