விழுப்புரம் அருகே முந்திரி எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 1,500 முந்திரி கொட்டை வைத்திருந்த தோல் மூட்டைகள் தீயில் எரிந்து சேதமானது.
விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் முந்திரி எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.இது குறித்து ஆலை பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த பண்ருட்டி,முத்தாண்டிக்குப்பம் மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தண்ணீர் கொண்டு தீயணைக்க அணைக்க முடியாததால் (FOAM) நுரையை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
பின்னர் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 1500 மூட்டை முந்திரி கொட்டை தோல் மற்றும் 500லிட்டருக்கும் மேற்பட்ட முந்திரி எண்ணெய் தீ விபத்தில் சேதமடைந்தது.மேலும் இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக நடைபெற்றிருக்கலாம் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.







