இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஒரு முழு நீல வசனத்தைப் பேசியுள்ளதாகவும், கேமாராவை எங்கும் நிறுத்தாமல் சிங்கிள் டேக்காக எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில், கிரேன் விபத்து, கொரோனா பரவல், பட்ஜெட் தொடர்பாக ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் பிரச்சினை எனப் பல காரணங்களால் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போடப்பட்டது. இதனால் இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாயின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின் ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் தற்போது சுமூகமாக முடிந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
சென்னை வடபழனி பிரசாத் லேபில் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு கட்ந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களுள் ஒருவரான பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், பேட்டி ஒன்றில் பேசுகையில் இந்தியன் 2 படம் மொத்தம் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் இருப்பதாகக் கூறினார். மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் இன்னொரு தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலினும் இணைந்தார். ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தை வாங்கி வெளியிட்டிருந்தார் உதயநிதி. அதில் நல்ல லாபம் கிடைத்தது மட்டும் இல்லாமல் 100 நாட்களைக் கடந்து திரையரங்கில் ஒடிக் கெண்டிருக்கிறது.
இந்நிலையில் மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. இதேபோல உதயநிதி நடிக்கும் ஒரு படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் இப்படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன் இடம்பெறும் 10 நிமிடக் காட்சி ஒன்றில் கமல்ஹாசன் 14 மொழிகள் கெண்ட ஒரு முழு நீல வசனத்தைப் பேசியுள்ளதாகவும் அக்கட்சி கேமாராவை எங்கும் நிறுத்தாமல் சிங்கிள் டேக்காக எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சி படத்தில் மிக முக்கிய காட்சியாகவும் படம் வெளியான பிறகு இக்காட்சி பெருமளவில் பேசப்படும் எனக் கூறப்படுகிறது.